ஹானர் நிறுவனம் சீன சந்தையில் ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனிற்கான புதிய டீஸர்களை ஹானர் பிராண்டு பகிர்ந்துள்ளது. டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் சிரீஸின் பேட்டரி மற்றும் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் முந்தைய சிரீசை விட கணிசமாக பெரிய திறன் கொண்ட பேட்டரிகள் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட்டை கொண்டிருக்கும். ஹானர் 400 சிரீஸ் சீனாவில் வருகிற 28-ந்தேதி மாலை வெளியிடப்படும்.