டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை தனது Altroz காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விலை வரம்பை அறிவிக்க உள்ளது.
இதனிடையே அதிகாரப்பூர்வ வெளியீடு மூலம் நிறுவனத்தால் ஷேர் செய்யப்பட்ட இமேஜ்களின் படி, 2025 Altroz இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் என இரண்டிலும் சில குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டு அறிமுகமாக உள்ளது.
எனவே, இது முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது சற்று சிறப்பாக இருக்குமென தெரிகிறது. மேலும், இந்த சமீபத்திய வெர்ஷன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மேம்படுத்தப்பட்ட கேபின் மற்றும் புதிய அம்சங்களுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.