மானாமதுரை அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வைகை ஆற்றங்கரையோரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நள்ளிரவு டாஸ்மாக் கடை தீப்பற்றி எரிவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், கடையிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தீ விபத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக் கடைக்கு யார் தீ வைத்தது என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.