ஜப்பான் NCAP கிராஷ் டெஸ்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுசுகி ஃபிராங்க்ஸ் மாடல் 4 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த சப்காம்பாக்ட் கிராஸ்ஓவர் மாடல் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பானிய கிராஷ் டெஸ்ட் ஏஜென்சி Fronx மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்பை மோதல் மற்றும் மோதல் தடுப்பு சோதனைகளுக்கு உட்படுத்தியது.
அப்போது கிராஸ்ஓவரான Fronx அதன் அடாஸ்(ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக 92% என்ற ஸ்கோரைப் பெற்றது, இருப்பினும் அது பயணி மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பில் 76% ஸ்கோரை மட்டுமே பெற்றது.