அமெரிக்காவில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டுத் தூதரகம் அமைந்துள்ளது. இங்குப் பயங்கரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தூதரக ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, அவர் பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டுமென முழக்கமிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.