கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.
பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நூல் குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கிறது.
புக்கர் பரிசு பெறும் புத்தக்கத்துக்கு 50,000 யூரோ பரிசுத்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.