காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.
இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருபுறம் வெடிகுண்டு தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என இரண்டினாலும் காசா மக்களை மரணம் துரத்தி வருகிறது.