படைத்தலைவன் திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டுச் சிக்கல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகச் சண்முக பாண்டியன் பதிவிட்டுள்ளார்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது ‘படைத் தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 23ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் படைத்தலைவன் திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டுச் சிக்கல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமெனவும் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.