புதுச்சேரி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு அம்மாநில சபாநாயகர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டியளித்த சேகர்பாபு, புதுச்சேரியில் தள்ளாடி கொண்டிருந்தவர்களை பார்த்ததால் தமிழிசை செந்தரராஜனுக்கு அனைத்தும் தள்ளாட்டமாக தெரிகிறது என அவதூறாக பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சபாயநாகர் செல்வம், மதுவால் புதுச்சேரி தள்ளாடவில்லை எனவும் கள்ளச்சாராய மரணங்களால் தமிழகம் தள்ளாடுவதாகவும் விமர்சித்தார்.