தமிழக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்தக் கடினமான நேரத்தில், திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வலிமையை, இறைவன் அவர்களுக்கு அருளட்டும்.
சகோதரி திவ்யப்பிரியா ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.