புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருவரங்குளம் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
சில காளைகள் களத்தில் இறங்கி வீரர்களை மிரள வைத்து சென்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பணம், ட்ரெஸ்ஸிங் டேபிள், வெள்ளி காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.