மெக்சிகோவில் டீசல் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
நியூவோ லியோனில் உள்ள காடெரேட்டாவில் டீசல் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
ஆனால், திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் ஒருவர் காயமடைந்தார். மேலும் 11 பேர் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர்.
இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.