இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் எட்டு F-16 ரக போர் விமானங்களும், நான்கு JF-17 ரக போர் விமானங்களும் சேதமடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் இரண்டு CM – 400 ஏவுகணைகள், இரண்டு ஷாஹீன் ஏவுகணைகள், 6 ஆளில்லா போர் விமானங்கள் உள்ளிட்டவையும் தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக 524 புள்ளி 72 மில்லியன் அமெரிக்க டாலரும், தரை வழி தாக்குதலில் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிற்கும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் C-130H ஹெர்குலஸ் விமானம், அதிநவீன HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவையும் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.