மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக நடிகை தமன்னாவைக் கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்ததற்கு, கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
2 ஆண்டுகளுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகை தமன்னாவுக்கு 6 கோடியே 20 லட்சம் ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரைப்படத்துறையில் திறமையான நடிகைகள் இருக்கும் போது, தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிற மாநிலங்களிலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலேயே தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளதாகக் கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது.