அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டியாகோ பகுதியில், சிறிய விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. அதில் விமானி உள்ளிட்ட 10 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், பனி மூட்டம் காரணமாக நிலைதடுமாறிய விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதனால் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.