ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘விவிட் சிட்னி 2025’ விழாவை முன்னிட்டு, அங்குள்ள ஒபேரா அரங்கம் ‘கிஸ் ஆஃப் லைட்’ என்ற நிகழ்ச்சியால் வண்ணமயமாகக் காட்சியளித்தது.
ஆண்டுதோறும் பொதுவான ஒரு கருப்பொருளை மையப்படுத்தி, கலை, இசை, உணவு போன்றவற்றைக் காட்சிப்படுத்தும் ஒரு நிகழ்வாக விவிட் சிட்னி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் ‘கனவு’ என்ற கருப்பொருளுடன் தொடங்கித் தொடர்ந்து 23 இரவுகள் நடைபெறவுள்ள இந்த விழா, பார்வையாளர்களுக்குப் பல வகையான அனுபவங்களை வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடந்த ‘கிஸ் ஆஃப் லைட்’ என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.