எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே அழித்தோம் எனவும், பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் இந்தியா குறிவைத்துத் தாக்கவில்லை எனவும் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது எனத் தெரிவித்த அமித்ஷா, நமது நாடு பல தசாப்தங்களாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, முழு உலகமும் இப்போது நமது ஆயுதப் படைகளையும், அவர்களின் தாக்குதல் திறன்களையும் பாராட்டப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் அமித்ஷா கூறினார்.