சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, சூளைமேடு, அமைந்தகரை என பல்வேறு பகுதிகளில் பரவலாக நள்ளிரவில் மழை பெய்தது.
மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.
இதேபோல் காஞ்சிபுரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென பொழிந்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சுழல் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்