அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ, டிம் குக் கூறியிருந்தார்.
ஆனால், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்க கூடாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.