பயங்கரவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசியதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு முதல் குழு ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. டோக்கியோவில் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜை சந்தித்து ஆலோசனை நடத்திய எம்பிக்கள், ஜப்பான் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த பேசினர்.
அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து அனைத்துக்கட்சி எம்பிக்கள் ஒரே குரலில் பேசியதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு ஜப்பான்தான் முதலில் கண்டன குரல் எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.