நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் தங்களுக்கிடையிலான பிரச்சனைகள் குறித்து இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சமரச பேச்சுவார்த்தையில் சேர்ந்து வாழ விரும்பவில்லை என ரவி மோகன் கூறியதைத் தொடர்ந்து, அவரை பிரிவதற்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் இருவருக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி விசாரணையின்போது இருதரப்பும் அமைதியாக இருக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.