திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து, சாலையோரங்களில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில், பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். கேரளாவுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.