கோவை மாவட்டம் நடூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டுவதைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை நடைபெறும் சாலை விரிவாக்க பணியையொட்டி சாலையோர மரங்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள சில வீடுகளை அகற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், மரம் வெட்டும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.