மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுப்பன்றி, செந்நாய் மற்றும் பிற வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில் , மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையில் தலா 3 பேர் கொண்ட 6 குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.