இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன், ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம் எனத் தெரிவித்தார்.
இரு நாடுகள் இடையேயான ராணுவ தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதை ஜெர்மனி ஆதரிப்பதாகத் தெரிவித்த ஜோஹன், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.