பாமகவுக்கு நான் தான் தலைவர் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 24, 2025, 07:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு இடையே எழுந்திருக்கும் அதிகாரப்பிரச்னை கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனை குறித்தும் பாமகவின் எதிர்காலம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சிறப்பாக எதிர்கொள்வதற்காக பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என்ற ராமதாஸின் அறிவிப்பில் தொடங்கிய பாமகவின் உட்கட்சி பிரச்சனை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் அவர் பதவியைப் பறிப்பதற்கான காரணம் என்ன என நிர்வாகிகள் சிலர் ராமதாஸிஸ்கு எதிராக எழுப்பிய கேள்வி உட்கட்சி பூசலை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இதற்கிடையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பின் வன்னியர் சங்கம் நடத்திய வன்னிய இளைஞர்கள் சித்திரை முழுநிலவு மாநாட்டின் குழுத்தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில் பாமகவின் உட்கட்சி பூசல் முடிவடைந்துவிட்டதாக எண்ணிய நிர்வாகிகளுக்கு அந்த மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் குறித்தும் தொண்டர்கள் பற்றியும் ராமதாஸின் பேச்சு அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வன்னியர் சங்கம் நடத்திய முழுநிலவு மாநாட்டிற்குப் பின் அன்புமணியை மீண்டும் தலைவராக ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

அதோடு மாநாட்டில் ஜி.கே மணியைப் பற்றி பெருமையாகப் பேசிய ராமதாஸ், அன்புமணியின் உழைப்பைப் பாராட்டத் தவறிவிட்டதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியது.   அந்த அதிருப்தியின் வெளிப்பாடே ராமதாஸ் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 90 சதவிகிதம் பேர் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

ஏற்கனவே பாமக நடத்திய பொதுக்குழுவில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பு ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, நீலாங்கரையில் தனக்கென தனி அலுவலகம் திறந்திருப்பதாகவும், தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகள் அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம் எனவும் மேடையிலேயே பேசியிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அன்புமணி மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களும் திட்டமிட்டே புறக்கணித்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பாமகவின் தலைவராகத் தன்னை அறிவிக்கும் வரை ராமதாஸ் நடத்தக் கூடிய கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்புமணிக்கு ஆதரவாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் இருப்பதையும் அடுத்தடுத்த கூட்டங்கள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தந்தை, மகனுக்கும் இடையேயான பிரச்சனை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நேரத்தில் சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை என்று  பேசுவதையும், நீச்சல் குளத்தில் நீச்சலடித்து தன் வீரத்தைக் காட்டுவது போன்ற காணொளிகளையும் வெளியிடுவதைத் தவிர்த்துவிட்டு கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அன்புமணியைத் தலைவராக அறிவிக்க முன்வர வேண்டும் என ராமதாஸுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்து வருகிறார்கள் பாமகவின் மூத்த நிர்வாகிகளும் அடிமட்டத் தொண்டர்களும்..!

Tags: பாமகpmktn politicsAm I the leader of the PMK?தலைவர்
Share
Tweet
SendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

Next Post

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies