ஜெர்மனியின் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர்.
ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பெண் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். அந்தப் பெண்ணை அங்கிருந்த போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியதன் நோக்கம், அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.