பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ஜெய்சங்கர், பஹல்காம் தாக்குதலின் முக்கிய நோக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதும், காஷ்மீரில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையைச் சேதப்படுத்துவதும் ஆகும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவதே பஹல்காம் தாக்குதலின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது எனத் தெரிவித்ததுடன், அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது எனவும் தெரிவித்தார்.