நீலகிரி வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகை வந்தடைந்தனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட பருவமழை கண்காணிப்பு அலுவலர் லலிதா ஆகியோர் சந்தித்தனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களையும் பார்வையிட்டனர்.