மேட்டுப்பாளையம் அருகே திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து ஈஸ்வரன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் மூலம் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் சென்ற முதியவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.