தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கேரளா, பீகார், மேற்குவங்கம் உட்பட 5 மாநில முதலமைச்சர்கள் தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.