தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் மதகுகள், வெள்ள அபாய எச்சரிக்கை கருவி உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு இயக்கி பார்த்தனர்.மேலும், அணை பகுதியில் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.