சென்னையில் இன்று நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க விமான நிலையம் வந்தடைந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது.
இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் நிலையில், விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.