முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் உடுமலை ராதாகிருஷ்ணனின் பேத்தியின் காதணி விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரே மேடையில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.