இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று சண்டை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், பேரழிவு விளைவுக்கும் ஆயுதங்களை தயாரிக்க சீனாவிடம் இருந்து வெடி பொருட்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் நெருங்கிய ராணுவ உறவை மேற்கொண்டுவரும் பாகிஸ்தான், இந்தியாவின் ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நாட்டின் ராணுவ கட்டமைப்பை நவீனமயமாக்கி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.