அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜோதி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இம்முறை நடத்தப்பட்ட விழாவில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு புனிதநீர் கொண்டு வரும் நிகழ்வின்போது 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.