மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
லஞ்ச வசூல் குறித்து ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி டாஸ்மாக் விற்பனையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கள்ளச்சாராய உயிரிழப்பைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக் கூடாது என்றும், ஆவணங்களைப் பார்க்கும்போது டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது என்பது தெரிகிறது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.