தமிழ்நாடு முருகப்பெருமானின் பூமி என்றும், தமிழகம் கற்றுக் கொடுத்த அனுபவம் தன் வாழ்விற்கு வழிகாட்டுவதாகவும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரில் பேசியவர்,
நான் தமிழ்நாட்டை விட்டுப் போயிருக்கலாம், தமிழ்நாடு என்னை விடவில்லை என்றும் தமிழ்நாடு என்மீது நல்ல தாக்கம் ஏற்படுத்தி உள்ளது என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீது எனக்கு நல்ல மதிப்பு என்றும் இது சித்தர்கள் பூமி, நான் வணங்கும் முருகன் பூமி, ஆயிரக்கணக்கான கோயில்கள் பூமி, எனக்குப் பிடித்த எம் ஜி ஆர் பூமி, வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பூமி என பவன் கல்யாண் கூறினார்.
தமிழ்நாடு எனக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் என் வாழ்வின் வழிகாட்டியாக மாறி விட்டது என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தவரான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் முடிவுகள் நேரத்தில் அவர்கள் ஜெயித்தால் evm நல்ல மிஷன் எனவும், தோல்வியுற்றால் குறையும் கூறுவார்கள் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என குற்றம் சாட்டியவர், இது எப்படி இருக்கிறது தெரியுமா? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என குறிப்பிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் புதிது அல்ல என்றும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலில் ஒற்றுமை இருக்க வேண்டும் எனக் கூறியவர் கலைஞர் கருணாநிதி, ஆனால் வருத்தம் என்னவென்றால் அவர்கள் இதனை எதிர்க்கிறார்கள் என பவன் கல்யாண் கூறினார்.
பாரதத்தின் ஒருங்கிணைந்த தன்மைக்குக் காரணம் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது தான் என்றும் கலைஞர் கருணாநிதியின் வாதம் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் தான் என பவன் கல்யாண் குறிப்பிட்டார்.
தேசிய தலைமை கூட கருணாநிதியின் ஆசையைத் தான் இங்கே கூறுகிறது என்றும், ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், தந்தை சொன்னதையே எதிர்க்கிறார் என அவர் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்தடுத்து தேர்தல் நடக்கும் போது வளர்ச்சிக்கான சிந்தனை, ஒருங்கிணைப்பதற்கான சிந்தனை எப்படி வரும்? என்று கேள்வி எழுப்பிய பவன் கல்யாண், ஒவ்வொரு ஆண்டும் எதாவது ஒரு இடத்தில் தேர்தல் நடந்துக்கொண்டே இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.
ஆளுங்கட்சிகள் ஒரு தேர்தல் முடிந்ததும் அடுத்த தேர்தலுக்கான வேலைகளில் கவனம் செலுத்துகின்றன என்றும் இதனால் அரசின் செயல்பாடுகள் கவனம் சிதறலுக்கு உள்ளாகிறது என அவர் கூறினார்.
நாம் இந்த உலகின் அதிக மதிப்புடைய மக்களாட்சி முறையைக் கொண்டுள்ளோம் என்றும் ராம்நாத் கோவிந்த் கமிட்டி அறிக்கையின் படி ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும் பெரிய அளவில் உதவும் என தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிர்ப்பு சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்றும் 2024 ஒடிசா தேர்தலில் மக்கள் பாஜகவைத் தேர்வு செய்தனர் என்றும் சட்டமன்றத்தில் அமர வைத்தனர் என அவர் கூறினார்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இண்டியா கூட்டணி என்பது கூட்டாட்சிக்கு எதிராக உள்ளது என்றும் இந்தி திணிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் எனப் பல இருந்தாலும் அவற்றைக் குறித்துப் பேசி முடிவெடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சீர் திருத்தம் மட்டும் அல்ல, பொருளாதார, நிர்வாக, ஆட்சி சீர்திருத்தம் என்றும் இது நம் தமிழ்நாட்டிற்குத் தேவையான சீர்திருத்தம் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என்றும் இதனை ஏற்றுக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டார்.