இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வடைந்து உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.