நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை காரணமாகப் பாறைகள் உருண்டு விழுந்து சாலைகள் சேதமடைந்தன.
நீலகிரியில் 2 நாட்களாக அதேகனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கல்லட்டி மலைப் பாதையின் 20வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை உருண்டு சாலை மீது விழுந்தது. இதனால் சாலை சேதமடைந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவிலிருந்து மசினகுடி, கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகை வரும் வாகனங்கள் கூடலூர் வழியாகச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.