டாடா, ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஒன்றைக் கர்நாடகாவில் அமைக்கவுள்ளன.
இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் தொழிற்சாலை, கோலாரில் அமைக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தின் டாடா அட்வான்சுடு சிஸ்டம்ஸ் மற்றும் ஐரோப்பாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்பஸ் ஆகியவை இணைந்து தொழிற்சாலையைக் கட்டமைக்கின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.