பாகிஸ்தான் வீதிகளில் ஜோதி மல்ஹோத்ரா துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வலம் வந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யூ-டியூபரான ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஸ்காட்டிஷ் யூ-டியூபரான காலம் மில்லி, பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஜோதி மல்ஹோத்ராவை சந்தித்தபோது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் AK-47 துப்பாக்கிகள் ஏந்திய 6 போலீசார் பாதுகாப்புடன் அங்குள்ள கடை வீதிகளில் ஜோதி மல்ஹோத்ரா வலம் வந்துள்ளார். அப்போது அவரை அணுகிய காலம் மில்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.