கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெளுத்து வாங்கிய கன மழை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மழை மேலும் வலுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று வயநாடு, கோழிக்கோடு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்” டும்,
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலர்ட்”ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 30 ஆம் தேதி வரை அதி தீவிர மற்றும் அதிகன மழை நீடிக்கும் என்பதால் கேரளா மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இடுக்கி,வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.