உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் ED மீது பயம் இருந்துகொண்டே இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயம் இல்லையென்றால் ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் வெளிநாடு செல்ல அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் ஊழல் வழக்கில் தலையிட ED-க்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், யார் ஆட்சி செய்தாலும் நீதி என்பது நிச்சயம் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மின்சார கட்டண உயர்வால் தொழில் நுறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நீண்ட காலம் நண்பர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் மகனின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்ததாகவும், ம் காலை மதுரையில் நடைபெறும் அறுபடை முருக பக்தர்களின் மாநாட்டிற்கான கால்கோள் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.