நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சுமார் 40 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகின்றன.
இந்த நிலையில் கொல்லிமலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தன. இதன் காரணமாக செம்மேடு, சோளக்காடு, எல்லைக்கிரையாம்பட்டி, கரையங்காடு உள்ளிட்ட பகுதியில் மரங்கள் சாய்ந்ததில் மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது,
மின்சாரம் இல்லாமல் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான ஊழியர்களை கொண்டு மின்சாரம் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.