மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு மாவட்டம் சார்பாக ஜூன் 22 அன்று மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் முருகபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களை பெருந்திரளான எண்ணிக்கையில் பங்கேற்க செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.