விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.
கூட்டேரிபட்டு பகுதியில் சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு கார் திடீரென வலது புறம் திரும்பியது.
இதனால் வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி முட்புதருக்குள் சென்றது.