பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், பிரெஞ்சு வீரர் ஆர்தர் ரிண்டர்க்னெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6 க்கு 4, 6 க்கு 3 மற்றும் 7 க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரிச்சர்ட் காஸ்கெட் உடன் மோத உள்ளார்.