லிவர்பூல் நகரில் நடந்த வெற்றி அணிவகுப்பின் போது மக்கள் மீது கார் மோதியதில் 27 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடந்தது. இதில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இந்த அணியினர் லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் 27 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 53 வயது பிரிட்டிஷ் நபர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிரதமர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.