பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
மே 29 – ம் தேதி, சிக்கிம் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கு காலை 11 மணியளவில் “சிக்கிம்@50: வளர்ச்சிக்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும் பகுதி மற்றும் இயற்கையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இடம்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சிக்கிம் மாநிலத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் உரையாற்றுகிறார்.
பின்னர், மேற்கு வங்கம் செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2:15 மணியளவில் அலிப்பூர்துவாரில் உள்ள அலிப்பூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதனைத்தடுத்து, பீகார் செல்லும் பிரதமர், பட்னா விமான நிலையத்தின் புதிய விமான முனையதிற்கான கட்டிடத்தை மாலை 5:45 மணியளவில் திறந்து வைக்கிறார்.
மே 30 – ம் தேதி காலை 11 மணிக்கு, பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகிறார்.
அதன்பிறகு, உத்தரபிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், பிற்பகல் 2:45 மணிக்கு கான்பூரில் சுமார் ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.